Friday 11 November, 2011

ரவா கிச்சடி


வறுத்த ரவை - 2 கப்
பட்டாணி - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு, கடலைபருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை - ‌சி‌றிதளவு
எண்ணெய்
உப்பு
 




தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.










வாண‌லி‌யி‌‌ல் 1ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.











வெங்காயம், ‌தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.











எண்ணெய் பிரியும்போது பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவு‌ம்.










எ‌ல்லா‌ காய்களும் ந‌ன்கு வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர், உ‌ப்பு சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.





 



த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியாகாமல் ‌கிளறவு‌ம்.










அதில் 3, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கவும்.











அடுப்பை சிம்மில் வைத்து சிறிது இடைவெளி இருக்கும்படி மூடிவைக்கவும்












5 நிமிடம் கழித்து நன்கு கிளறி பரிமாறவும்






2 comments:

ஆமினா said...

ஓ இப்படி தான் கிச்சடி செய்யணுமா?

நன்றி நாகா பகிர்வுக்கு

நாகா ராம் said...

ஆமாம் ஆமினா இப்படிதா செய்வோம். செய்து பாருங்க

Related Posts Plugin for WordPress, Blogger...