Monday 28 November, 2011

திரட்டுப்பால்

பால் - 1 லிட்டர்
ஜீனி - 1 கப்
தயிர் - 1 ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்



 
 முதலில் பாலைக்காய்ச்சி பொங்கியதும் சிம்மில் வைத்து 1 ஸ்பூன் தயிர்சேர்க்கவும். பால் பிரிந்ததும் அதில் ஜீனி, 2 ஸ்பூன் நெய் சேர்த்து விடாமல் கிளறவும்.







 

ஜீனி கரைந்து, ஓரங்களில் குமிழ்கள்வந்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்




சுவையான திரட்டுப்பால் ரெடி







Friday 18 November, 2011

ரோஸ்டட் பாகற்காய்



பாகற்காய் - 1 கப்
வெங்காயம்  - 10
தக்காளி - 2

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்பொடி, உப்பு - 1ஸ்பூன்


 

 பாகற்காயை இரண்டாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து ஊறவிடவும். 

10, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அதிலிருக்கும் தண்ணீரை வடித்தால் கசப்புத்தன்மை போய்விடும்.




 
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நீளமாகவும் நறுக்கவும்.

பாகற்காயில் மஞ்சள் தூள், மிளகாய்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,






கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை நன்கு வதக்கவும்





     



வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.





 

  

ஊறவைத்த பாகற்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.



 
ரோஸ்டட் பாகற்காய் ரெடி

Friday 11 November, 2011

ரவா கிச்சடி


வறுத்த ரவை - 2 கப்
பட்டாணி - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு, கடலைபருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை - ‌சி‌றிதளவு
எண்ணெய்
உப்பு
 




தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி வேகவை‌த்து‌க் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.










வாண‌லி‌யி‌‌ல் 1ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.











வெங்காயம், ‌தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.











எண்ணெய் பிரியும்போது பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவு‌ம்.










எ‌ல்லா‌ காய்களும் ந‌ன்கு வத‌ங்‌கிய ‌பி‌ன்பு தேவையான அளவு தண்‌ணீ‌ர், உ‌ப்பு சேர்த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.





 



த‌ண்‌ணீ‌ர் கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியாகாமல் ‌கிளறவு‌ம்.










அதில் 3, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கவும்.











அடுப்பை சிம்மில் வைத்து சிறிது இடைவெளி இருக்கும்படி மூடிவைக்கவும்












5 நிமிடம் கழித்து நன்கு கிளறி பரிமாறவும்






Saturday 5 November, 2011

புட்டு


 அரிசி மாவு - 1 1/2 கப்
 துருவிய தேங்காய் - 1 கப்
 சீனி - 1/2 கப்
 ஏலக்காய் - 2

 


முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து  உதிர்த்து வைக்கவும்.



    
ஸ்டீமரில் அரிசி மாவு கலவையை  10 நிமிடங்கள் வேகவிடவும்.








வெந்ததும் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய், சீனி, சேர்த்து கிளறவும்.













 சுவையான புட்டு தயார்.








Related Posts Plugin for WordPress, Blogger...