Sunday 30 October, 2011

கொண்டைக்கடலை சுண்டல்

தேவையான பொருள்கள்

முளைக்கட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப்
கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

 செய்முறை
  •   தேவையான பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளவும்

  • கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
  •  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து தாளிக்கவும்.
 

  • பின்னர், வேகவைத்த கொண்டைக்கடலை, தேவையானால் சிறிது உப்பு சேர்த்து கலந்து 1 நிமிடம் வைக்கவும்.
  •  சுவையான எளிதில் செய்யக்கூடிய சுண்டல் தயார்.

Tuesday 25 October, 2011


பருப்பு சாதம்


தேவையான பொருள்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்க
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
  செய்முறை




வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும்.
உருளியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.






 






வேகவைத்த வெங்காயம், தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து நன்றாக வதக்கவும்.











அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.





 






பின் வேக வைத்து வைத்துள்ள பருப்பை குழைத்து இக்கலவையுடன் சேர்க்கவும்.









பருப்பு கலவையை நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதிவந்தால் போதும்.











 கொத்தமல்லி தழை தூவி, சாதம், அப்பளத்துடன் சாப்பிட கூடிய பருப்பு ரெடி.
       

Sunday 23 October, 2011

கேசரி




தேவையான பொருள்கள்

வறுத்த ரவை - 1 கப்
ஜீனி - 11/2 கப்
முந்திரி- 10
உலர் திராட்சை - 10
நெய் - 5 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - ஒரு பின்ச்

செய்முறை

  • கனமான பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
  • பின்னர் அதே பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டி ஆகாமல் கிளறவும்.
  • 2 நிமிடம் கழித்து ரவை வெந்ததும், ஜீனி சேர்த்து கிளறவும்.
  • கேசரிகலரில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி கேசரியில் சேர்க்கவும்.
  • மீதி இருக்கும் நெய், முந்திரி, உலர் திராட்சையையும் கலந்து பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...