Friday 23 December, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்

தக்காளி - 2
வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 6
புளி - ஒரு கோது
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு

செய்முறை




தக்காளி வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.








வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.




சூடுபோக ஆற விட்டு, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

Tuesday 20 December, 2011

க்ரிஸ்பி கோகனட் கோபி





காலிஃப்ளவர் - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு


  காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி கொதிநீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேங்காய் பால் பவுடர், உப்பை ஒன்றாக  கலந்துவைக்கவும்.
    
 காலிஃப்ளவரை தண்ணீர் இல்லாமல் வடித்து பொடிகலவையை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
 





கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து காளிஃப்ளவரை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்





எண்ணெயில் பொரித்தெடுத்தது போன்ற க்ரிஸ்பி கோகனட் கோபி ரெடி.

Friday 16 December, 2011

பட்டாணி பனீர் குழம்பு



பனீர் - 100கிராம்
வேக வைத்த பட்டாணி - 1 கப்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு





 
 
பனீரை துண்டுகளாக்கி தோசைகல்லில் சிறிது எண்ணெய் தெளித்து வறுக்கவும்.







தக்காளி, வெங்காயம், பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.





பட்டை, கிராம்பு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


 


தேங்காய் பால் பவுடரில் 1/2 கப் வெந்நீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.


 







மசாலா வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்க்கவும்



 








1 நிமிடம் கழித்து தேங்காய் பால் பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 


 


நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுதே வறுத்த பனீர் சேர்த்து 1 நிமிடம் சிம்மில் வைக்கவும்.







சப்பாத்தி, நாண், மசாலா இட்லி, சாதத்திற்கு ஏற்ற சுவையான பட்டாணி பனீர் குழம்பு சுவைக்க தயார்  



Related Posts Plugin for WordPress, Blogger...