Sunday 23 October, 2011

கேசரி




தேவையான பொருள்கள்

வறுத்த ரவை - 1 கப்
ஜீனி - 11/2 கப்
முந்திரி- 10
உலர் திராட்சை - 10
நெய் - 5 ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - ஒரு பின்ச்

செய்முறை

  • கனமான பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.
  • பின்னர் அதே பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்ததும் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டி ஆகாமல் கிளறவும்.
  • 2 நிமிடம் கழித்து ரவை வெந்ததும், ஜீனி சேர்த்து கிளறவும்.
  • கேசரிகலரில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி கேசரியில் சேர்க்கவும்.
  • மீதி இருக்கும் நெய், முந்திரி, உலர் திராட்சையையும் கலந்து பரிமாறவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...