Friday, 18 November 2011

ரோஸ்டட் பாகற்காய்



பாகற்காய் - 1 கப்
வெங்காயம்  - 10
தக்காளி - 2

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்பொடி, உப்பு - 1ஸ்பூன்


 

 பாகற்காயை இரண்டாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து ஊறவிடவும். 

10, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அதிலிருக்கும் தண்ணீரை வடித்தால் கசப்புத்தன்மை போய்விடும்.




 
வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை நீளமாகவும் நறுக்கவும்.

பாகற்காயில் மஞ்சள் தூள், மிளகாய்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்,






கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தை நன்கு வதக்கவும்





     



வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.





 

  

ஊறவைத்த பாகற்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.



 
ரோஸ்டட் பாகற்காய் ரெடி

2 comments:

Asiya Omar said...

ரோஸ்ட்டட் பாகற்காய் சூப்பர்.

நாகா ராம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா :-) செய்து பார்த்துட்டு சொல்லுங்க

Related Posts Plugin for WordPress, Blogger...