பனீர் - 100கிராம்
வேக வைத்த பட்டாணி - 1 கப்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு

பனீரை துண்டுகளாக்கி தோசைகல்லில் சிறிது எண்ணெய் தெளித்து வறுக்கவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு, சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பால் பவுடரில் 1/2 கப் வெந்நீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
மசாலா வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்க்கவும்

1 நிமிடம் கழித்து தேங்காய் பால் பவுடர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுதே வறுத்த பனீர் சேர்த்து 1 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
2 comments:
அட போட்டோ எல்லாமே அருமையா இருக்கு
குறிப்பும் அருமை. இங்கே பனீர் கிடைக்காது நாகா. நானே செய்யணும் :-( நமக்கு தான் ரிஸ்க் எடுக்க தெரியாதே அவ்வ்வ்வ்வ்வ்
குறித்து வைத்துக்கொள்கிறேன். கிடைத்ததும் செய்து பார்க்கிறேன்
@ஆமினா போட்டோ நல்லா இருக்கா??!! :-( மொபைல்ல எடுத்தேன்.. சமைக்கதான் தெரியலனா போட்டோகூடவா சொதப்பும்னு நினைச்சேன் :-(
குறிப்பு, போட்டோ ரெண்டுமே நல்லா இருக்குனு சொல்லிட்டீங்க.. நன்றி.. :-)
எல்லாருக்கும் அவங்க போட்டோ பிடிக்காதோ??நீங்களும் அறுசுவைல போட்டோ சரியாயில்லனு வருத்தப்பட்டுருக்கீங்க... ஆனா அந்த போட்டோ எனக்கு பிடிச்சுது :-)
Post a Comment